வங்கியில் ரூ.354 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மத்தியப்பிரதேச முதல்வர் கமல் நாத்தின் மருமகனும், தொழிலதிபருமான ரதுல் பூரியை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
ரதுல் பூரி இயக்குனராக இருக்கும் மோசர் பேயர் நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் 4 பேரும் போலியான ஆவணங்கள் மூலம் ரூ.354 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மோசர் பேயர் நிறுவனத்துக்கு சொந்தமான 6 இடங்களில் நேற்று சிபிஐ திடீரென ரெய்டு நடத்தியது. இந்த சூழலில் அமலாக்கப்பிரிவினர் ரதுல் பூரியை கைது செய்துள்ளனர். ரதுல் பூரிக்கு எதிராக வங்கி மோசடி மட்டுமல்லாமல், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் வழக்கிலும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.