Skip to main content

நீதி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக் கூடாது - தலைமை நீதிபதி பேச்சு!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை வல்லுறவு செய்து கொலை செய்த நான்கு பேரை போலீஸார் நேற்று அதிகாலை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில் அவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தாமல் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றது சட்டத்துக்குப் புறம்பானது என சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால் பொதுமக்களில் அதிகமானோர் இந்த என்கவுண்ட்டர் கொலையை ஆரவாரமாக கொண்டாடி வருகிறார்கள். 



இந்நிலையில்,  இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஏ.போப்டே தெரிவித்துள்ளதாவது, " நீதி என்பது பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்ககூடாது. நீதி பழிவாங்கும் நடவடிக்கையானால், அதன் உண்மைத் தன்மையை நீதி இழந்துவிடும்" என தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்