Skip to main content

இந்தியாவில் ஊரடங்கு குறித்து மத்திய அரசு அறிவிப்பு...

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

உலகம் முழுவதும் கரோனா வைரசால் பலியானவர்கள் எண்ணிக்கை 15,000 ஐ கடந்துள்ள நிலையில், இந்தியாவில் 19 மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 165- க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிய நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.49 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகம் முழுவதும் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

Joint Secretary of Health Ministry about corona

 

 

இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் 19 மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலாளர், "19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முழுமையான ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சில பகுதிகள் லாக்டவுன் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 415 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், 23 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்