Skip to main content

ஐக்கிய இடதுசாரி கூட்டணி வெற்றி!!!

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
jnu


இந்தியாவின் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த 14-ம் தேதி மாணவர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் ஐக்கிய இடதுசாரி கூட்டணிக்கும், ஏபிவிபிக்கும் இடையே நேரடியான கடும் போட்டி நிலவியது.
 

இதனை தொடர்ந்து சில பிரச்சினைகளுக்கு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணும் பணி மீண்டும் நடைபெற்றது. இதில் ஐக்கிய இடதுசாரி கூட்டணியைச் சேர்ந்த சாய் பாலாஜி தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டார். சரிகா சவுத்ரி துணைத் தலைவராகவும், அஜாஸ் அகமது ராத்தர் பொதுச்செயலாளராகவும், அமுதா ஜெயதீப் துணை பொதுச்செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கத் தேர்தல்; அனைத்து இடங்களையும் கைப்பற்றியது இடதுசாரி கூட்டணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Left-wing alliance wins in JNU student union elections

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி  மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் ஜஷே ஜோஷ் வெற்றி பெற்றியிருந்தார்.

இந்த நிலையில், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஜே.என்.யூ மாணவர்கள் சங்கத் தேர்தல் கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், துணைத் தலைவர் உள்பட 4 பதவிகளையும் இடதுசாரி மாணவர்கள் அமைப்பு கைப்பற்றியுள்ளது. தலைவர் தேர்தலில் ஏ.பி.வி.பி. கட்சியின் உமேஷ் சந்திர ஆஜ்மீராவை தோற்கடித்து இடதுசாரி மாணவர் அமைப்பைச் சேர்ந்த பட்டியலின மாணவர் தனஞ்செய் 2,598 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.   

கடந்த 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பட்டி லால் பாயிர்வா என்ற பட்டியலின மாணவர் ஜே.என்.யூ மாணவர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவரான நிலையில், தற்போது 28 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பட்டியலின மாணவர் தலைவராகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜே.என்.யூ. மாணவர் சங்கத் தேர்தலில், ஆர்.எஸ்.எஸ் ஆதரவு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்(ஏ.பி.வி.பி) அனைத்து பதவிக்கான போட்டியிலும் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

போராடினால் 20,000 ரூபாய் அபராதம்; பல்கலைக்கழகத்தின் அறிவிப்பிற்கு மாணவர்கள் எதிர்ப்பு 

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
20,000 rupees fine for fighting; Students protest against the university's announcement

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) அவ்வப்போது மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இதற்கு முன்பு அங்கு ஏற்பட்ட மாணவர்கள் போராட்டம் பலமுறை கலவரத்திலும் முடிந்திருக்கிறது. இந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் போராடினால் 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக ஜேஎன்யூ பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கட்டிடங்களுக்கு 100 மீட்டருக்குள் மாணவர்கள் தர்ணா அல்லது சுவரொட்டிகளை ஒட்டினால் 20,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். தேச விரோத செயலில் மாணவர்கள் ஈடுபட்டால் பத்தாயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். வகுப்புவாத, சமூக மோதல் அல்லது தேச விரோத கருத்துக்களைக் கொண்ட சுவரொட்டிகள் அல்லது துண்டு பிரசுரங்களை பல்கலைக்கழகத்தில் ஒட்டுவதற்கு அனுமதி இல்லை.

உண்ணாவிரதம், தர்ணாவில் ஈடுபடும் மாணவருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டு மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள். விடுதியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். படிக்கும் காலத்தில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனைகள் பெறும் மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து முழுவதுமாக வெளியேற்றப்படுவர். மாணவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனை விவரம் குறித்த நகல் பெற்றோர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் மற்றும் இணையத்திலும் பதிவேற்றப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகம் கருத்துரிமையை நொறுக்கும் வகையில் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளதாக மாணவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.