Published on 31/01/2021 | Edited on 31/01/2021

கடந்த ஜனவரி 26- ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை அரங்கேறியது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், ''வன்முறை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது. குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறைக்கு எனது கண்டனம். ஜனவரி 26 ஆம் தேதி மூவர்ணக்கொடி அவமதிக்கப்பட்டது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது'' என்றார்.