ஜம்மு- காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவு குறித்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்து வருகிறார். அதில் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததன் மூலம் காஷ்மீர், லடாக் பகுதி மக்களுக்கு புதிய வழி பிறந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் மத்திய அரசின் பிரதமரின் மருத்துவ காப்பீடு வசதிகள், பிரதமரின் கல்வி உதவி தொகைகள், மத்திய அரசின் ஓய்வூதிய திட்டங்கள் இனி காஷ்மீர் மக்களுக்கு கிடைக்கும். சட்டப்பிரிவு 370 காஷ்மீர் மாநில வளர்ச்சிக்கு தடையாக இருந்தது.
அதே போல் பயங்கரவாதம் வளர்ந்ததற்கு சட்டப்பிரிவு 370 காரணம் என என கூறினார். கல்வி மற்றும் வேலை வேலை வாய்ப்பில் காஷ்மீர் உள்ளூர் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என காஷ்மீர் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உறுதி. இதன் மூலம் அனைத்து மக்களுக்கும் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையை மத்திய அரசு உறுதி செய்யும். அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சட்டப்பிரிவு 37ஐ நீக்கியதன் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேல், வாஜ்பாய் கனவு நினைவாகியுள்ளதாக பேசினார்.
தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர், காஷ்மீர் மாநிலத்தில் வந்து திரைப்படங்கள் எடுக்க வேண்டும் என்றும், படப்பிடிப்பு தளங்கள் தொடங்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் என குறிப்பிட்டுள்ளார்.