
டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகம் அருகே இன்று மாலை 05:10 மணியளவில் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக டெல்லி போலீசாருக்கு தொலைபேசி வழியாக தகவல் கிடைத்துள்ளது. இந்த புகாரையடுத்து போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட தீவிர சோதனையில் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். அதே சமயம் இஸ்ரேல் தூதரகம், அப்பகுதியில் உள்ள சாலைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு டெல்லி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் உள்ள இஸ்ரேல் நாட்டின் தூதரகம் அருகே வெடிச்சத்தம் கேட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.