Published on 22/04/2019 | Edited on 22/04/2019

சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் இறுதிப் போட்டி ஐதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதாக இருந்த போட்டி மாற்றப்பட்டுள்ளது. 12,000 பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்ட 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி இன்னும் அனுமதி வழங்காததால், இடவசதி பற்றாக்குறை காரணமாக இந்தப் போட்டி மாற்றப்பட்டுள்ளது. மே12ம் தேதி ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இறுதிப் போட்டிக்கு பதிலாக முதல் தகுதிச் சுற்று சென்னையில் நடக்கிறது.