பாரதி ஏர்டெல், தனது ப்ரீபெய்ட் (prepaid) வடிக்கையாளர்களுக்கு புதிய சர்வேதேச ரோமிங் பிளானை, அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு 'ஃபாரின் பாஸ்' (Foreign Pass) என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இது அமெரிக்கா, லண்டன், கனடா மற்றும் அரபு நாடுகள் என்று மொத்தம் 20 நாடுகளில் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 196 ரூபாயில் தொடங்கி, 446 ரூபாய் என்று மூன்று திட்டங்களாக உள்ளது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதில் 196 ரூபாய் திட்டத்தின் மூலம் ஏழு நாட்களுக்கு 20 நிமிடங்கள் வரையும், 296 ரூபாய் திட்டத்தின் மூலம் முப்பது நாட்களுக்கு 40 நிமிடங்கள் வரையும், 446 ரூபாய் திட்டத்தின் மூலம் தொண்ணுறு நாட்கள் 75 நிமிடங்கள் வரையும், உபயோகப்படுத்தலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் ஏர்டெல் நிறுவனம்தான் முதன் முதலில் இப்படி ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது என்று அந்நிறுவனத்தின் மூத்த மார்கெட்டிங் அதிகாரியான வாணி வெங்கடேஷ் தெரிவித்தார்.