Published on 29/03/2019 | Edited on 29/03/2019
100 க்கும் மேற்பட்ட திரையுலகினர் ஒன்றாக சேர்ந்து நாடு முழுவதும் மக்களிடம் பாஜக வுக்கு வாக்கு அளிக்காதீர்கள் என்ற கோரிக்கையுடன் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

இந்தியா முழுவதும் 100 க்கும் மேற்பட்ட திரையுலக பிரபலங்கள் இதில் கலந்துகொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக வெறுப்பு அரசியலையும், மதவாதத்தையும் தூண்டி அரசியல் செய்வதாகவும், மேலும் 2014 ஆம் ஆண்டு பாஜக கொடுத்த எந்த வாக்குறுதியையும் கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை எனவும் கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழ் இயக்குனர் வெற்றிமாறன் உட்பட பல முன்னணி இந்திய திரையுலகினர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கையெழுத்திட்டவர்களின் பெயர் பட்டியல் :
https://www.artistuniteindia.com/