Skip to main content

ராட்சத பனி மனிதனின் கால்தடத்தை கண்டுபிடித்த இந்திய ராணுவம்...(படங்கள்)

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

நேபாள எல்லை பகுதியில் உள்ள இமயமலை பகுதியில் ராட்சத பனி மனிதனின் கால்தடத்தை இந்திய ராணுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.

 

indian army found snowman named yeti in india nepal border

 

 

மகாலு-பருண் எல்லை பகுதியில் இந்திய ராணுவத்தினர் மலையேற்றம் மேற்கொண்ட போது 32 அங்குலம் நீளமும், 15 அங்குலம் அகலமும் உடைய ராட்சத காலடி தடம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

"எட்டி" என அழைக்கப்படும் ராட்சத பனி மனிதனுடைய காலடித்தடமான இதனை புகைப்படம் எடுத்து இந்திய ராணுவத்தின் ஏடிஜிபிஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே நேபாள பகுதியில் உள்ள மகாலு-பருண் பகுதியில் ஒருமுறை எட்டி என்ற இந்த பனி மனிதனை ராணுவத்தினர் கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மனிதனை விட உயரமான இந்த 'எட்டி' இமயமலை, அமெரிக்கா மற்றும் சைபீரிய பனிப்பிரதேச பகுதிகளிலும் மட்டுமே இருப்பதற்கான வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்