ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
புல்வாமா தாக்குதலை விட மோசமான தாக்குதல்கள் இந்தியாவில் நடக்கலாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரிக்கை விடுக்கும் அளவு மோசமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவம் மற்றும் கடற்படை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை அறிக்கை வந்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட 7 மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கடல் வழியாகவும் பயங்கரவாதிகள் ஊடுருவ வாய்ப்பிருப்பதால் இந்திய கடற்படை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. போர் கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.