Published on 21/05/2022 | Edited on 21/05/2022

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெய் சங்கர், "எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பிரிக்ஸ் நாடுகள் இந்த விவகாரத்தில் உறுதியாக இருக்கின்றன. ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக உலகின் எரிசக்தி தேவை அதிகரித்திருக்கிறது. உலக நாடுகளின் நன்மை கருதி இதனைக் கட்டுப்படுத்தவேண்டும்" எனத் தெரிவித்தார்.