இந்தியாவில் கரோனாதடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சில மாநிலங்கள் கரோனாதடுப்பூசி பற்றாக்குறைகுறித்து புகார் எழுப்பியுள்ளன. இப்புகார்களை மத்திய அரசு மறுத்து வருகிறது. இந்தநிலையில், தேவையான அனைவருக்கும் கரோனாதடுப்பூசியை வழங்கவேண்டுமெனவும், கரோனாதடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவும் கோரி, பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி நேற்று கடிதம் எழுதினார்.
இந்தநிலையில்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாட்டில் கரோனாபரவல் நிலை குறித்து, காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் காணொளிவாயிலாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தடுப்பூசி ஏற்றுமதி, இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டதாகக் கூறியுள்ளார்.
கூட்டத்தில் சோனியா காந்தி பேசியவை,"பரிசோதனை செய்வது, பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பது, தடுப்பூசி செலுத்துவது ஆகியவற்றிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். கரோனாபாதிப்புகள் குறித்து வெளிப்படைத்தன்மை வேண்டும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களாக இருந்தாலும்இல்லாவிட்டாலும் சரி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கரோனாபாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும், கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையையும் அரசு கண்டிப்பாக வெளியிட வேண்டும். முதலில் நாம்தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதன்பிறகே தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ, பரிசளிக்கவோ வேண்டும். மோடி அரசாங்கம், கரோனா நிலையை தவறாகக் கையாண்டுவிட்டது. தடுப்பூசியை ஏற்றுமதி செய்து, இந்தியாவில் கரோனாதடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட அனுமதித்துவிட்டதுஎன சோனியா காந்தி தெரிவித்தார்.
மேலும், "தேர்தல் பிரச்சாரத்துக்கும், மத நிகழ்ச்சிகளுக்கும்கூடிய கூட்டங்கள் கரோனாபரவலை அதிகரித்துவிட்டது. அதற்கு, ஓரளவிற்கு நாமும் பொறுப்பு. இதற்கான பொறுப்பை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். நாட்டின் நலனை, உங்கள் சொந்த நலனுக்கு மேலாக வைத்திருங்கள்" எனவும் அந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி கூறினார்.