நாடெங்கும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன தொலைத்தொடர்பு சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது. இந்த சேவை வழங்குவது தொடர்பான, ஏலம் இன்று (26/07/2022) தொடங்குகிறது. இதில், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடாஃபோன்- ஐடியா, அதானி ஆகிய நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன.
72 ஜிகா ஹெட்ஸ் அளவுள்ள அலைக்கற்றைகள் விற்பனை மூலம் அரசுக்கு 4.30 லட்சம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில், அதிகளவு அலைக்கற்றைகளை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிறுவனம், 14,000 கோடி ரூபாயை முன்வைப்பு தொகையாக செலுத்தியுள்ளது.
ஏர்டெல் 5,500 கோடி ரூபாயையும், வோடாஃபோன்- ஐடியா 2,200 கோடி ரூபாயையும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் நிறுவனம் 100 கோடி ரூபாயையும் முன் வைப்பு தொகையாக செலுத்தியுள்ளன. 5ஜி சேவை ஓரிரு மாதங்களில் பெருநகரங்களில் மட்டும் தொடங்கப்படவுள்ளது. இதன் பின் இந்த சேவை படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.