உலக அளவில் விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலகளவில் ஒப்பிடும் போது, சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியாவின் நிலை என்ன? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அரசு அளித்துள்ள பதிலில், ஜெனிவாவில் உள்ள 'சர்வதேச சாலை கூட்டமைப்பு' வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, விபத்துகள் அதிகம் நடக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
சாலை விபத்துகளின் போது உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கையின் படி, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 2020- ஆம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 69.80% பேர் 18 முதல் 45 வயதுடையோர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.