Published on 07/06/2019 | Edited on 07/06/2019
உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று 7 அடி உயர ராமர் சிலையை அயோத்தியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் திறந்து வைத்தார். இந்த சிலை ரோஜா மரத்துண்டினால் செய்யப்பட்டுள்ளது. 35 லட்சம் மதிப்புள்ள ரோஜா மரத்துண்டு கர்நாடகத்திலிருந்து வாங்கப்பட்டு சிலை உருவாக்கப்பட்டது. இந்த சிலையை கர்நாடாக மாநில கலை மற்றும் கைவினைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் உருவாக்கினர்.
![RAMAR](http://image.nakkheeran.in/cdn/farfuture/kuoRJhJP4p6fuW5d6nDEFK4oO5TZ32SKCDq14_ImVgU/1559904968/sites/default/files/inline-images/RAMAR.jpg)
ராமரின் கோதண்டராம் அவதாரம் சிலையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ராமர் வாழ்க்கையைக் குறிக்கும் 2,500 பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கர்நாடாக மாநில கலை மற்றும் கைவினைத் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது.