Skip to main content

இணையதள வசதிகள் இருந்தால் போதும்...அரசு உயர் அதிகாரிகளை மக்கள் எளிதாக சந்திக்கலாம்!

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

மத்திய அரசின் மின்ணணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் மத்திய மற்றும் மாநில அரசுக்களின் உயர் அதிகாரிகளை மக்கள் எளிதாக சந்திக்கும் வகையில் ஒரு புதிய இணைய தளத்தை  உருவாக்கியுள்ளது. இந்த இணைய தளத்தின் பெயர் "My Visitors" (or) "e-visitors" ஆகும். இணைய தள முகவரி: https://evisitors.nic.in/public/Home.aspx (அல்லது) https://evisitors.nic.in/public/MyVisitRegistration.aspx . மத்திய மற்றும் மாநில அரசுகளின் துறை சார்ந்த உயர் அதிகாரிகளை சந்திக்க விரும்புவோர்கள், மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு சென்று "Visitors Details" என்ற "Options" இடம் பெற்றிருக்கும். அதில் அதிகாரிகளை சந்திக்க கூடிய நபரின் பெயர், நிரந்தர முகவரி, தொலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஏதேனும் ஒரு அடையாள அட்டை எண் (அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை பான் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை) உள்ளிட்டவை பூர்த்திச்செய்ய வேண்டும்.

 

 

my visitors

 

 

பின்பு "To Meet" என்ற "Options" இடம் பெற்றிருக்கும். அதில் மத்திய அரசு , மாநில அரசு இரு அரசுகளின் எந்த அரசு அதிகாரிகளை சந்திக்க வேண்டுமோ, அந்த மாநில அரசின் பெயரை தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு எந்த துறையை சார்ந்த அதிகாரிகளை சந்திக்க வேண்டுமோ, அந்த துறையின் பெயர் , அதிகாரிகளின் பெயர் உள்ளிட்டவை தேர்ந்தெடுத்து, எந்த தேதியில் அதிகாரிகளை சந்திக்கிறீர்கள் மற்றும் நேரம் உள்ளிட்டவை குறிப்பிட்டு, எத்தனை நபர்களுடன் சென்று அதிகாரிகளை சந்திக்க உள்ளீர்கள் என்பது தொடர்பான எண்ணிக்கையை குறிப்பிட்டு, எதற்காக அதிகாரிகளை சந்திக்கிறீர்கள் என்பது தொடர்பான முழு விவரத்தை கட்டாயம் குறிப்பிட்டு "Submit" செய்தால் பதிவு எண்களானது, தொலைப்பேசி எண், ஈ-மெயில் முகவரிக்கு வரும். அதனைத் தொடர்ந்து தனது விண்ணப்பத்தின் நிலையை இணையதள முகவரி: https://evisitors.nic.in/public/MyVisitStatus.aspx சென்று பதிவு எண் குறிப்பிட்டால் விண்ணப்பத்தின் நிலையை எளிதாக அறியலாம். அதே போல் சமந்தப்பட்ட அதிகாரி விண்ணப்பத்தை பார்த்து விட்டு, ஒப்புதல் அளித்தால் சமந்தப்பட்ட நபருக்கு துறையின் அதிகாரி குறுந்தகவல் மூலமாகவோ அல்லது ஈ-மெயில் மூலமாகவோ "Visitors Pass" யை வழங்குவார்.

 

 

evisitors

 

 

அதன் பின் விண்ணப்பித்த நபர் "visitors pass" - யை பதிவிறக்கம் செய்து  எடுத்துக் கொண்டு அரசு அதிகாரிகளை எளிதில் சந்தித்து தனது கிராமம் அல்லது மாவட்ட மக்களின் குறைகளை அதிகாரியிடம் தெரிவித்து, நிரந்தர தீர்வை காணலாம். மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளை தனி நபரோ அல்லது குழுவினரோ சந்திக்கலாம். இந்த இணைய தளத்தை மத்திய அரசின் நிறுவனமான " National Informatics Centre" நிறுவனம் உருவாக்கி உள்ளது. மக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை குறைக்கவே மத்திய அரசு இத்தகைய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளை எளிதாக மத்திய அரசின் அதிகாரிகளிடம் எடுத்து சென்று பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வை காண முடியும் என்றால் எவராலும் மறுக்க முடியாது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்