இந்தியாவில் உள்ள வர்த்தக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான புகார்களை மக்கள் எளிதாக தெரிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி (RESERVE BANK OF INDIA) புதிய இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த இணையதளத்தில் பெயர் ‘புகார் மேலாண்மை அமைப்பு’ (COMPLAINT MANAGEMENT SYSTEM- CMS) ஆகும். இதற்கான இணைய தள முகவரி: https://cms.rbi.org.in/cms/IndexPage.aspx?aspxerrorpath=/cms/cms/indexpage.aspx ஆகும். இந்த இணைய தளத்தை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று தொடங்கி வைத்தார். அதே போல் இந்த இணையத்தளம் ரிசர்வ் வங்கியின் முழு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும். இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அல்லது ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும்.

வங்கிகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக மாற்றவும், அவர்களது குறைகளை தீர்ப்பதற்கும். இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கியின் இத்தகையை நடவடிக்கையால் மக்களுக்கு தரமான வங்கி சேவையை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இணைய தளம் மூலம் புகார் அளிக்கும் மக்கள், புகார் அளித்தற்கான ஒப்புகை சீட்டுக்களை (ACKNOWLEDGEMENT OF RECEIPT) பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் (அல்லது) ஒப்புகை சீட்டில் இடம் பெற்றுள்ள எண்களை பதிவு செய்து கொள்ளலாம்.

அதன் பிறகு புகார் மனுவின் நிலையை அறிய இணைய தள முகவரி: https://cms.rbi.org.in/rbi/VividFlow/run/trackapplicationrbi#Rbi_TrackApplication சென்று ஒப்புகை சீட்டில் ((ACKNOWLEDGEMENT OF RECEIPT NUMBER) இடம் பெற்றுள்ள எண்ணை குறிப்பிட்டு புகார் மனுவின் நிலையை எளிதாக அறியலாம்.

அதன் போல் ரிசர்வ் வங்கியிடம் அளித்த புகார் மனுவிற்கு தீர்வு கிடைத்த பிறகும், அதில் திருப்தி இல்லை எனில், "மேல்முறையீடு" (FIRST APPEAL) செய்யலாம். அதற்கான வசதியும் இந்த இணைய தளத்தில் உள்ளது. வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க புகார் அளிப்போரின் பெயர், மின்னஞ்சல் முகவரி, நிரந்தர முகவரி, தொலைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.