ஐக்கிய நாடுகள் சபையின், மனிதவள மேம்பாட்டு திட்ட அமைப்பு, ஆண்டுதோறும் மனிதவள மேம்பாட்டு குறியீட்டு அட்டவணையை வெளியிட்டு வருகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சியை பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டும் அளவிடமால், அந்தநாட்டு மக்களின் தனிப்பட்ட மேம்பாட்டையும் வைத்து கணக்கிடுவதே இந்த அட்டவணையின் நோக்கம்.
ஒரு நாட்டில் உள்ள மக்களின் ஆயுட்காலம், கல்வி, வாழ்க்கைத் தரம் உள்ளிட்டவற்றை வைத்து மக்களின் மேம்பாடு கணக்கிட படுகிறது. இந்தநிலையில், 2020 ஆம் ஆண்டிற்கான மனிதவள மேம்பாட்டு குறியீட்டு அட்டவணை ஐ.நாவால் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில், கடந்த வருடம் 129வது இடத்தில் இருந்த இந்தியா, இந்தமுறை இரண்டு இடங்கள் சரிந்து 131 வது இடத்தை பெற்றுள்ளது. இந்தப்பட்டியலில், முதல் இரண்டு இடங்களை முறையே நார்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் பிடித்துள்ளன. கடைசி இரண்டு இடங்களை முறையே மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் நைஜர் நாடுகள் பிடித்துள்ளன.