Published on 22/03/2020 | Edited on 22/03/2020
இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கரோனா பாதிப்பால் கொல்கத்தாவில் இருந்து வந்த 38 வயது மதிக்கத்தக்க நபர் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இன்று காலை ஒருவர் கரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கையும் 324 லிருந்து 341 ஆக உயர்ந்துள்ளது.