Skip to main content

பகலிரவு டெஸ்டில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!

Published on 24/11/2019 | Edited on 24/11/2019

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான 2- வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று (22.11.2019) முன்தினம் தொடங்கியது. பகல்- இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் நடத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 106 ரன்னில் சுருண்டது.

india and Bangladesh test match india record achievement kolkata


வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 106, இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வங்கதேச அணி தரப்பில் முஸ்பிகுர் 74, மெஹ்முதுல்லா 39, அல் அமீன் 21 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 5, இஷாந்த் சர்மா 4 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

india and Bangladesh test match india record achievement kolkata


தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. அதேபோல் டெஸ்டில் தொடர்ச்சியாக 7 போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. 
 

இந்தூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.



 

சார்ந்த செய்திகள்