தேவைப்பட்டால் மீண்டும் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ - இராணுவத்தளபதி சூசகம்!
தேவைப்பட்டால் இந்திய பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் மீண்டும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தத் தயாராக இருப்பதாக இந்திய இராணுவப்படையின் தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இந்திய இராணுவத்தளபதி பிபின் ராவத், ‘பாகிஸ்தான் இராணுவத்துடன் உரையாடல் நடத்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் தான் உதவியது. அவர்களுக்குப் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை அவர்களுக்குப் புரியவில்லை என்றால், தேவைப்பட்டால் இன்னொரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தவும் நாம் தயாராக இருக்கிறோம். இந்த முறை தாக்குதல் வேறு வடிவத்தில் வித்தியாசமானதாக இருக்கும். இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் மாதிரியான தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவிற்கு வலிமையான நாடு. தேசபாதுகாப்பிற்கு இதுமாதிரியான தாக்குதல்கள் தேவையானவையாக இருக்கின்றன’ என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இந்திய ராணுவப்படையினர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் முகாமிட்டிருந்த பாகிஸ்தான் தீவிரவாதப் படையினர் மீது தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தாக்குதல் நாடு முழுவதும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ச.ப.மதிவாணன்