Published on 27/04/2020 | Edited on 27/04/2020
சீனாவிடமிருந்து வாங்கிய ரேபிட் சோதனை கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது.
கரோனா பரிசோதனையை விரைவாக செய்வதற்காக இந்தியா சீனாவிலிருந்து 5.5 லட்சம் ரேபிட் சோதனை கருவிகளை வாங்கியது. இந்தியா வந்த இந்த கருவியை கொண்டு இரண்டு நாட்கள் மக்களுக்குப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அனால் இதில் பெரும்பாலான சோதனை முடிவுகள் தவறாக வருவதாக மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநில அரசுகள் தெரிவித்தன. இதனையடுத்து ரேபிட் சோதனை கருவி பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது ஐசிஎம்ஆர். இந்நிலையில், ஐசிஎம்ஆர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயோ மெடிக்ஸ், வோன்ஃபோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ரேபிட் சோதனை கருவிகளை மருத்துவ பரிசோதனைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.