![Husband setting fire to wife and daughter in auto incident](http://image.nakkheeran.in/cdn/farfuture/QzQHG7wSGrpdtHIad8Zb0L5xBIN4FzEbi_xxpy4KpLU/1651770762/sites/default/files/inline-images/dtwetwe.jpg)
மனைவியையும் மகள்களையும் சரக்கு ஆட்டோவில் வைத்து தீ வைத்துக் கொளுத்திய நபர் தன்னையும் தீ வைத்துக் கொளுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரத்தை அடுத்த கொண்டிப்பரம்பா என்ற பகுதியைச் சேர்ந்த முகமது என்ற நபர் சரக்கு ஆட்டோவில் அவரது மனைவியையும் இரண்டு மகள்களையும் உட்காரவைத்து வெளியே வராதபடி பூட்டி தீ வைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் தன் மீதும் தீவைத்துக் கொண்ட முகமது தீப்பற்றிய உடலுடன் அருகிலிருந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாகக் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஆட்டோவில் பூட்டப்பட்டு தீ வைக்கப்பட்டதில் அவரது மனைவியும் 11 வயது மூத்த மகளும் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐந்து வயது இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மலப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது மீது ஏற்கனவே போக்சோ வழக்கு ஒன்று இருப்பதாகக் கூறப்படுகிற நிலையில் மனைவி மகளை முகமது ஏன் கொலை செய்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.