இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷி ஜிங்பிங் இடையேயான சந்திப்பு சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த சந்திப்பில் இரு நாட்டு தலைவர்களும் சுமார் 6 மணி நேரம் வரை பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து தனது இரண்டு நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சீன அதிபர் நேபாளம் புறப்பட்டுச் சென்றார். அதன் தொடர்ச்சியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இதனிடையே மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நடந்து சென்று சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார் பிரதமர் மோடி. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர், கடற்கரை பகுதியில் தூய்மை பணி செய்யும் போது தனது கையில் வைத்திருந்தது "அக்குபிரஷர் ரோலர் என்றும், அக்குபிரஷர் ரோலர் மிகவும் உதவியாக இருந்ததாகவும், தான் இதனை அடிக்கடி பயன்படுத்துவதாக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.