Skip to main content

வீடு, வாகனக் கடன் வட்டி குறைக்கப்படும்- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்! 

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

நாட்டில் நிலவும்  பொருளாதார நிலை குறித்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்து வருகிறார். அப்போது பேசிய அமைச்சர், சர்வதேச நாடுகளை ஒப்பிடும் போது இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. மேலும் மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும் என்று கூறினார். அதன்படி வீடு, வாகனக்கடன் வட்டிகள் குறைக்கப்படும் என்றும், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெறும் நடைமுறை எளிதாக்கப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். 

 

HOME LOAN AND VEHICLE LOAN INTEREST REDUCE UNION FININANCE MINISTER NIRMALA SITHARAMAN ANNOUNCED

 

 

அதே போல் ஜி.எஸ்.டி ரிஃபண்ட் தொகை 30 நாட்களுக்குள் திருப்பி தரப்படும். வங்கிகளுக்கு மத்திய அரசு சார்பில் மூலதன தொகை ரூபாய் 5 லட்சம் கோடி வழங்கப்படும். வங்கிகளில் ஒருமுறைக்கு மேல் ஆதார் கார்டை கொண்டு வர வாடிக்கையாளர்களை வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது. வடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகளே குறைத்து கொள்ளலாம். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குவதற்கான புதிய கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும்.

 

ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பு பலன்கள் அப்படியே மக்களுக்கு கிடைக்கும் வகையில் நடவடிக்கை. ஒரு முறை பதிவுக்கட்டண நடைமுறை அடுத்த ஆண்டு ஜூன் வரை ஒத்திவைக்கப்படுகிறது. 2020 மார்ச் 30- க்கு முன் வாங்கும் பிஎஸ் 4 வாகனங்கள் தொடர்ந்து இயங்க அனுமதி. தொழில் முனைவோர்கள் செலுத்தி வந்த (ANGEL TAX) திரும்ப பெறுவதாக மத்திய அமைச்சர் அறிவித்தார். இது போன்ற பல்வேறு சலுகைகளை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளார். 

இவ்வாறு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.



 

சார்ந்த செய்திகள்