அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோயிலில் வைக்கப்பட உள்ள ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என இந்துத்துவா தலைவர் சம்பாஜி பிதே தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் சூழலில், அதற்கான பூமி பூஜை வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் விமர்சையாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ராமர் கோயிலில் வைக்கப்படவுள்ள ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என இந்துத்துவா தலைவர் சம்பாஜி பிதே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "நீங்கள் நிறுவப் போகிற ராமர், லட்சுமணன் சிலைகளுக்கு மீசை இருக்க வேண்டும் என்று கோயில் அறக்கட்டளையின் அறங்காவலர் கோவிந்த் கிரிஜி மகாராஜிடம் கேட்டுள்ளேன். ராமர் சிலைகளுக்கு மீசை இல்லாமல் போனால் கோயில் கட்டப்பட்டாலும், என்னைப் போன்ற ராமர் பக்தருக்கு, அது பயனில்லை என்று கூறியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.