Skip to main content

சினிமாவிலும் ஹிந்தி திணிப்பு -சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக பிரமுகர்

Published on 02/06/2018 | Edited on 02/06/2018

பா.ஜ.க.வின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்த்தியா, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோரை சந்தித்து , 'பாலிவுட்' என்ற வார்த்தையை தடை செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார், ஹிந்தித் திரைப்படத் துறை என்ற பொருத்தமான பெயரைக் குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டார்.அப்போது கூறுகையில்,

 

HINDI

 

 

 

"சில நாட்களுக்கு முன்பு, திரைப்படத் தயாரிப்பாளர் சுபாஷ் காய் என்னை பி.ஜெ.பி தலைமையகத்தில் சந்தித்தார். பிபிசி அதுவரை ஹாலிவுட் திரைப்படங்களின் நகல்கள்தான் என்று படம்பிடித்துக் காட்டிய பிறகு, ஹிந்தித் திரைப்படத்துறை பாலிவுட் என்ற வார்த்தையைப் பெற்றது என்று அவர் என்னிடம் கூறினார். எங்கள் திரைப்படத் தொழில் நுட்பத்தை கேலிக்கூத்தாக்கப் பயன்படுத்திய காலத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் ஆனால் இனி முடியாது.

 

 

 

மேலும் இந்தியாவின் சிறந்த திரைப்படத் தயாரிப்பாளர்களான சத்யஜித்ரே மற்றும் தாதாசாஹேப் பால்கே ஆகியோர் சிறந்த திரைப்படங்களை இயக்கியவர் அப்படி இருக்கும்பொழுது  "நாங்கள் ஆங்கிலத் திரைப்படத் தொழிலை நகலெடுக்கிறோம் என்பதை எப்படி ஒப்புக்கொள்வது?" என்று தன்னிடம் முறையிட்டதாகவும் கூறியுள்ளார்.

 

எனவே பாலிவுட்' என்ற வார்த்தையை அகற்றி இந்தி திரைப்படத்துறை என்று அழைக்க முன்வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் .ஊடகங்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே விஜயவர்த்தியா கடந்த காலங்களில் உணர்ச்சியற்ற மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுவதற்கு 'புகழ் பெற்றவர்'' என்பது குறிப்பிட தக்கது.

சார்ந்த செய்திகள்