Skip to main content

நவம்பர் 9ம் தேதி இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
நவம்பர் 9ம் தேதி இமாச்சல் சட்டப்பேரவை தேர்தல்

இமாச்சல்பிரதேஷ் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல்  நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஏகே ஜோதி அறிவித்தார். 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ஜனவரி 7ம் தேதி இமாச்சல் பேரவையின் பதவிக்காலம் முடிவடைகிறது. 

இமாச்சலில் அக்.16ம் தேதி முதல் வேட்புமனுதாக்கல் செய்யலாம். அக்.23ம் தேதி வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்.26ம் தேதி வேட்பு மனுவை  திரும்பப்பெற கடைசி நாளாகும். நவம்பர் 9ம் தேதி நடக்கும் இமாச்சல் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ம் தேதி நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தில் 7,521 வாக்குச்சாவடிகள் அமைக்கபடும். அனைத்து வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தார். 

இதேபோல் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். எனினும் குஜராத்தில் வரும் டிசம்பர் 18க்கு முன்பாக பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 182 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட குஜராத் பேரவையின் பதவிக்காலம் வரும் ஜனவரி 22ம் தேதியோடு முடிவடைகிறது. 3வது முறையாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. 

சார்ந்த செய்திகள்