பா.ஜ.கவைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சர்ச்சைகளில் சிக்குவது என்பது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு முறையும் மேடைகளில் ஏறி மற்ற தலைவர்களை சாடுவது அல்லது மற்ற மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் பேசுவது போன்றவைகள் இதற்கு எடுத்துக்காட்டு. இதற்கு மற்ற அரசியல் கட்சி பிரமுகர்களும் கண்டனம் தெரிவிப்பர். ஆனால் இந்த முறை ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் கண்டனம் கூட தெரிவிக்க முடியாத செயலை செய்துள்ளார்.
ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சரான காளிச்சரண் சரப் தனது காரிலிருந்து இறங்கி சாலையோரம் சிறுநீர் கழித்துள்ளார் அப்பொழுது யாரோ புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்தியா முழுவதும் தூய்மையாக வைத்திருக்கவும், திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லா தேசமாக இந்தியா இருக்க வேண்டும் என்று "ஸ்வச் பாரத் அபியான்" திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வரும் பா.ஜ.க அரசின் அமைச்சரே இவ்வாறு செய்துள்ளது கட்சிக்கு வேதனை அளித்துள்ளது.
இவ்வாறு நீங்கள் செய்துள்ளீர்களே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப "இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை" என்று காளிச்சரண் எளிமையாக பதில் அளித்துள்ளார். இவர் இந்த காரியத்தை செய்ததற்கு ஆளும் அரசு வெட்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.ரகு ஷர்மா தெரிவித்துள்ளார்.
Published on 15/02/2018 | Edited on 15/02/2018