Skip to main content

சிறப்பு தபால் தலைகளை வெளியிட்ட பிரதமர் மோடி!

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Prime Minister Modi released special postage stamps

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு பிரபலங்கள், பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் பாஜக, ராமர் கோவிலை அயோத்தியில் கட்டி தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது. அதேபோன்று கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக ராமர் கோவில் விவகாரத்தை வைத்து பிரச்சாரம் நடத்தி இருந்தது.

அதே சமயம் தொடர்ந்து பாஜக இரண்டு முறை மத்தியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் நிலையில் இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிற நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட உள்ளது. கோவில் வேலைகள் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில், பாஜக அரசு தேர்தலை காரணம் காட்டி முன்கூட்டியே கோவிலை திறப்பதாகவும், இது அரசியல் செயல்திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயம் தொடர்பான ஆறு சிறப்புத் தபால் தலைகளை வெளியிட்டார். இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில், “புனித அயோத்தி தாம் மற்றும் பகவான் ஸ்ரீ ராமரின் பாரம்பரியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட நினைவு அஞ்சல் தலையை வெளியிடும் பாக்கியம் இன்று கிடைத்தது. இந்நிகழ்ச்சியில், உலகம் முழுவதும் ஸ்ரீராமர் குறித்து வெளியிடப்பட்ட தபால் தலைகள் தொடர்பான புத்தகமும் வெளியிடப்பட்டது. நினைவு தபால் தலையும், இந்தப் புத்தகமும், ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலின் கும்பாபிஷேகத்தின் மங்களகரமான நிகழ்வை பல தலைமுறைகளுக்கு நினைவூட்டும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்