Skip to main content

பட்டேல் சமூகத்தினரை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது-பாஜக

Published on 05/09/2018 | Edited on 05/09/2018
hardik patel


பட்டேல் சமூகத்தினருக்கு 50% இடஒதுக்கீடு வேண்டும் என்று கடந்த 2015ஆம் ஆண்டில் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி என்னும் அமைப்பு போராட்டம் நடத்தியது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் இந்த அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல். இறுதியில் இந்த போராட்டம் கலவரமாக மாறியது, இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
 

இபோராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஹர்திக் தன்னுடைய பண்ணை வீட்டில் கடந்த 25ஆம் தேதி மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார். 11 நாளை கடந்துள்ள நிலையில், ஹர்திக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவரின் உடல்நிலை குறித்து அம்மாநில அமைச்சர் சவுரவ் படேல் கூறுவதாவது. 
 

”ஹர்திக் உடல்நிலை குறித்து அரசு கவலை அடைந்துள்ளது. மருத்துவர்களுக்கு ஹர்திக் ஒத்துழைக்க வேண்டும். அவர்களின் ஆலோசனையை ஏற்க வேண்டும். இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்க வாய்ப்பில்லை. இப் போராட்டம் அரசியல் நோக்கம் கொண்டது. இதன் பின்னணியில் காங்கிரஸ் உள்ளது. பட்டேல் சமூகத்தினரை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது” என்று காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்