Published on 26/09/2021 | Edited on 26/09/2021
வங்கக்கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும்-கலிங்கபட்டினத்திற்கும் இடையே புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என அறிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், புயல் கரையைக் கடக்கும்போது 75 கிலோ மீட்டர் முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது எனவும் அறிவித்துள்ளது.
தெற்கு ஒடிசா மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்புயல் காரணமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.