குஜராத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில் இன்று வாக்குப்பதிவானது துவங்கியுள்ளது. அதேபோல் இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியும் துவங்கியுள்ளது.
குஜராத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 64.33 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கையானது துவங்கியுள்ளது. பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நடைபெறும் நிலையில், குஜராத்தில் குறைந்தபட்சம் 92 இடங்களில் வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும். அதேபோல் இமாச்சல் சட்டசபை தேர்தலில் 68 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. குறைந்தது 35 இடங்களைப் பெறும் கட்சி இமாச்சலப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும்.
இந்த இரண்டு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது வீடியோ பதிவு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நிலையில், குஜராத்தில் மூன்று தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.