தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று தற்போது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இதில் தமிழக மற்றும் கேரள அரசு சார்பில் அதிகாரிகள் நேரிலும், கர்நாடக அரசு சார்பில் அரசு அதிகாரிகள் காணொளி காட்சி வாயிலாகவும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. கூட்டத்தின் நோக்கம் தண்ணீர் திறப்பு பற்றி மட்டுமே விவாதிக்கப்பட்டது. நடைபெற்ற விவாதத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மே மாதத்திற்கான தண்ணீர் திறப்பாக 2.5 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு காவிரியில் பிலிகுண்டுலுவில் இருந்து திறந்து விட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தக் கூட்டம் ஜூன் மாதத்தில் தொடக்கத்திலேயே நடைபெறலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஆனால் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on 21/05/2024 | Edited on 21/05/2024