சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட காவலர்; மனமுடைந்த தந்தை மரணம்!
உத்தரப்பிரதேசம் மாநிலம் பல்லியா அருகிலுள்ள பகுதி ரியோட்டி. இந்தப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பணியில் இருந்த காவல்துறையைச் சேர்ந்த ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிறுமி இயற்கை உபாதையைக் கழிக்க வெளியே சென்றபோது, அந்தப் பகுதியில் இருந்த காவலர் மற்றும் ஊர்ப்பெரியவர் இருவரும் தவறாக நடந்துகொள்ள முயற்சித்துள்ளனர். இதில் இருந்து தப்பிக்க அந்த சிறுமி குரலெழுப்பியதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மீட்டுள்ளனர். உடனே சம்பவ இடத்தில் இருந்து சம்பந்தப்பட்ட காவலர் தப்பிச்சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை அறிந்த சிறுமியின் தந்தை, மனமுடைந்து அதேநாளில் உயிரிழந்தார். சம்பந்தப்பட்ட காவலர் முதலில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது இளம்சிறார் பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அளிக்கவேண்டிய காவல்துறையைச் சேர்ந்தவரே சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- ச.ப.மதிவாணன்