Published on 01/07/2018 | Edited on 01/07/2018
ஜி.எஸ்.டி வரி அமலுக்கு கொண்டுவந்து ஒரு வருடம் நிறைவடைத்துள்ளதால் மத்திய அரசு இந்த நாளை ஜி.எஸ்.டி நாளாக கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் கோயல் கூறுகையில், பல்வேறு வரிகளை ஒழித்து சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி வரி நடைமுறைடுத்தப்பட்டு இன்றுடன் ஒரு ஆண்டு முடிந்துள்ளது.
மேலும் இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பில் இந்த ஆண்டிற்கான வரவு 12 லட்சம் கோடிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலக்கையும் தாண்டி, இந்த வருடம் மட்டும் 13 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாயாக கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது என கூறியுள்ளார்.
இந்த ஜி.எஸ்.டியின் வரிவரவு அதிகரிப்பால் வரும் காலத்தில் பல பொருள்களுக்கான வரி விகிதம் குறைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.