Published on 30/04/2019 | Edited on 30/04/2019
பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். உச்சநீதிமன்றம் இதை கண்டித்த நிலையில் ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்தார்.
ராகுல்காந்தி வருத்தம் தெரிவிப்பது வெறும் கண் துடைப்புதான். ராகுல்காந்தியின் பதில் மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பாஜகவின் மீனாட்சி லேகி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதன் பின்னர் ராகுல்காந்தி தரப்பு வழக்கறிஞர் மன்னிப்பு கேட்டார்.
