Skip to main content

"கூகுள், ஃபேஸ்புக், அமேசான் நிறுவனங்கள் நிதித்துறையில் ஈடுபடுவது அச்சுறுத்தல்"- ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை! 

Published on 18/06/2022 | Edited on 18/06/2022

 

"Google, Facebook, Amazon threatening to get involved in finance" - Reserve Bank Governor warns!

 

கூகுள், ஃபேஸ்புக், அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் நிதிச்சேவையில் ஈடுபடுவது பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார்.

 

தனியார் ஊடக நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ், இந்நிறுவனங்களுக்கு இடையே நிலவும் போட்டி மற்றும் தனிநபர் தகவல் பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிறுவனங்கள், நிதிச் சேவையில் ஈடுபடுவது, தொடர் அச்சுறுத்தலாக உள்ளது என்றும், இவற்றை முறையாகக் கண்காணிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார். 

 

கடனை திரும்ப வசூலிப்பதில் கடுமையான நடைமுறையை இவைப் பின்பற்றுவதோடு வாடிக்கையாளரை அகால நேரத்தில் அழைத்து ஆபாச வார்த்தைகளில் துன்புறுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார். 

 

இது குறித்து புகார் வந்தால், தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்