Skip to main content

சிங்கிள் பசங்களால் கடுப்பான கூகுள் அஸிஸ்டெண்ட்...!

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

கூகுள் அஸிஸ்டெண்ட், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன்களில் தகவல்களை பெறுவதற்கும், சில பணிகளை நமது கைகளின் உதவி இல்லாமலும் செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைக்கொண்டு தயாரிக்கப்பட்டது. இந்த கூகுள் அஸிஸ்டெண்ட் மனிதர்களின் குரல் மூலம் அவர்கள் கேட்கும் தகவல்களை தேடித்திரட்டி தரும். 

 

gg

 

ஆனால், பெரும்பான்மை மக்கள் யாரும் அதற்காக அதனை உபயோகிக்கவில்லை என்பது நேற்று தெரிந்துள்ளது. காரணம் ஸ்மார்ட் ஃபோன்களை கையில் வைத்துகொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் எதையாவது செய்துகொண்டிருப்பவர்கள் சமீபகாலமாக கூகுள் அஸிஸ்டெண்டை வம்புக்கு இழுத்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக கூகுள் அஸிஸ்டெண்டிடம் கேட்கப்பட்ட கேள்வி ‘கூகுள் என்னை திருமணம் செய்துகொள்கிறாயா?’ என்பதுதான்.

 

 

 

இதனை திரும்ப திரும்ப கேட்க கடுப்பான கூகுள், “எங்களுக்கு உண்மையாக... தெரியவேண்டும் ஏன் கூகுள் அஸிஸ்டெண்டிடம் நீங்கள் திருமணம் செய்துகொள்ள கேட்கிறீர்கள்?” என்ற பதில் கேள்வியை எழுப்பி இந்திய கூகுள் தலைமை ட்வீட் செய்துள்ளது. அதற்கும் இளைஞர்கள் கலாய்த்து ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்