Skip to main content

ஜி 20 உச்சி மாநாடு; டெல்லியில் விடுமுறை அறிவிப்பு

Published on 26/08/2023 | Edited on 26/08/2023

 

G20 Summit Notification of holiday in Delhi

 

ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. மேலும் டெல்லியில் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜி - 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி - 20 உறுப்பு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர்.

 

இதையொட்டி செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக என டெல்லி அரசு சார்பில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு செப்டம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் விடுமுறை அளித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் உத்தரவிட்டுள்ளார். மேலும் டெல்லியில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. 

 

 

 

 

சார்ந்த செய்திகள்