Skip to main content

தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்த மே. வங்க முன்னாள் அமைச்சர் கைது!

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

bjp leader

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்தவர் சியாமபிரசாத் முகர்ஜி. இந்த ஆண்டு நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்.

 

இந்தநிலையில், கடந்த ஆண்டு பிஷ்ணுபூர் நகராட்சித் தலைவராக சியாமபிரசாத் முகர்ஜி பதவி வகித்தபோது, அவர் ரூ. 9.91 கோடி அளவிற்கு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சியாமபிரசாத் முகர்ஜியிடம் மேற்கு வங்க காவல்துறை விசாரணை நடத்தியது.

 

இந்த விசாரணையில் சியாமபிரசாத் முகர்ஜி திருப்திகரமான பதில்களை வழங்காததால், அவரை மேற்கு வங்க காவல்துறை கைது செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்