Published on 18/09/2018 | Edited on 18/09/2018

இந்தியா சுதந்திரம் பெற்று முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரியான அன்னா ராஜம் மல்ஹோத்ரா நேற்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 91.
1951ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ராஜம், மெட்ராஸில் முதல்வர் ராஜாஜியின் கீழ் பணிபுரிந்தவர். ஏழு முதல்வர்களின் கீழ் பணியாற்றியுள்ள ராஜம், முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின் கீழும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.