Published on 22/06/2021 | Edited on 22/06/2021
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 5.2 கிலோ எடையுடன் குழந்தை பிறந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாகவே பிறந்த குழந்தைகள் 2.5 கிலோ முதல் 3.5 கிலோ வரை இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில், அஸ்ஸாமில் இளம்பெண் ஒருவருக்கு 5.2 கிலோ எடையில் குழந்தை பிறந்துள்ளது. அந்தப் பெண்ணைப் பிரசவத்துக்காக மே 29ஆம் தேதி மருத்துவமனை வர வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், கரோனா பயம் காரணமாக அந்தப் பெண் 20 நாட்கள் கழித்து மருத்துவமனை வந்துள்ளார். குழந்தை அதிக எடையுடன் பிறக்க இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் 5 கிலோவுக்கு அதிகமான எடையுடன் பிறந்த முதல் குழந்தை என்ற சிறப்பை அக்குழந்தை பெற்றுள்ளது.