Skip to main content

கஜா, வர்தாவை மிஞ்சும் ஃபோனி புயல்....10 லட்சம் பேர் வெளியேற்றம்

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

வங்க கடலில் உருவான ஃபோனி புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஒடிஷா நோக்கி நகர்ந்து கோபால்பூர் மற்றும் புரி தெற்கே உள்ள சந்த்பாலி  இடையே இன்று காலை புயல் கரையை கடக்கத் தொடங்கியது. 

 

 ஃபோனி  புயலால் ஒடிஷா மாநிலம் புரியில்  142 கிமீ  முதல் 174 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. கடந்த 43 ஆண்டுகளில் இதுபோன்ற வலுவான புயல் ஒன்று உருவாகி கடந்ததில்லை. கஜா, வர்தா புயல்களை விட மிக வலிமையான புயலாக ஃபோனி புயல் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 

storm

 

புயல் கரையைக் கடப்பதால் 10,000 கிராமங்களிலும் 52 நகரங்களும் பாதிப்புக்குள்ளாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. சுமார் 10 லட்சம் பேர் முன்னெச்சரிக்கைக்காக பாதுகாப்பான பகுதிகளுக்கும், புயல் நிவாரண முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்