அந்நிய நேரடி முதலீட்டின், நடப்பு நிதியாண்டில் 11 சதவீதம் முதலீடு குறைந்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-19 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு 22.66 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இதுவே கடந்த 2017-18 நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 25.35 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என தெர்விக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 2.69 பில்லியன் அமெரிக்க டாலர் குறைவு. இதனை சதவீதத்தில் கணக்கீடும்போது கடந்த நிதியாண்டைவிட இந்த நிதியாண்டின் அந்நிய நேரடி முதலீடு 11 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் இந்தியாவில், 2018-19 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான நிதியாண்டில் அதிகளவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் சிங்கப்பூர் 8.62 பில்லியன் அமெரிக்க டாலருடன் முதலிடத்தில் உள்ளது.