காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். வீரமரணம் அடைந்த அந்த வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அரசு மரியாதையுடன் அவர்கள் உடலை அடக்கம் செய்தன. இந்நிலையில், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்த வசந்தகுமார் என்ற சிஆர்பிஎப் வீரரும் மரணமடைந்தார். அவரின் உடலுக்கு அரசு மரியாதையை செய்ய வந்திருந்த மத்திய அமைச்சர் அல்போன்ஸ் சவப்பெட்டி முன் நின்று புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக்கில் வெளியிட்டார். இதனை தொடர்ந்து உயிரிழந்த ராணுவ வீரர் முன்னிலையில் செல்பி எடுத்து போட்டுள்ளார் என சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து அவர் சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், 'பாதுகாப்பு படை வீரர் வசந்தகுமாரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். அப்போது, சவப்பெட்டி அருகே நான் நின்றுகொண்டிருந்த போது என்னை சிலர் புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படத்தை எனது அட்மின் பேஸ்புக்கில் வெளியிட்டார். அது செல்பி அல்ல. மத்திய மந்திரியான என்னை பற்றி இப்படி தவறான செய்திகளை பரப்புவது சட்டவிரோதமானது' என தெரிவித்தார். மேலும் இப்படி பொய் செய்திகளை பரப்பியவர்கள் மேடு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள டிஜிபிக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.