தந்தையை கொன்ற மகன் கைது
புறநகர் டெல்லி நிகல்விகார் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் குடித்து விட்டு வந்து, மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம். கடந்த 8ம் தேதியும் வழக்கம் போல் குடித்துவிட்டு வந்து, தினேஷ் மனைவியை திட்டியதோடு, சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை கண்ட அவரது 19 வயது மகன் ராகுல் அவர்களை சமரசம் செய்தான். ஆனால் வாய்த்தகராறு முற்றி, ராகுல் கத்தியை எடுத்து, தந்தை தினேஷை சரமாரியாக குத்தினான். பின் தந்தையை கொலை செய்துவிட்டதாக ராகுல் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.