Published on 07/09/2018 | Edited on 07/09/2018
பட்டேல் சமூகத்தினருக்கு 50% இடஒதுக்கீடு வேண்டும் என்று கடந்த 2015ஆம் ஆண்டில் பட்டிடார் அனாமத் அந்தோலன் சமிதி என்னும் அமைப்பு போராட்டம் நடத்தியது. இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் இந்த அமைப்பின் தலைவர் ஹர்திக் பட்டேல். இறுதியில் இந்த போராட்டம் கலவரமாக மாறியது, இதில் 14 பேர் உயிரிழந்தனர்.
இபோராட்டத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஹர்திக் தன்னுடைய பண்ணை வீட்டில் கடந்த 25-ஆம் தேதி மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார்.இந்த உண்ணாவிரத போராட்டம் 14 நாளை கடந்துள்ள நிலையில், ஹர்திக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள நிலையில் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.